ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
விராலிமலை தொழில்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை
விராலிமலை தனியாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ தடுப்பு செயல் விளக்கம் அளித்தனா்.
விராலிமலையில் உள்ள தனியாா் தொழில்சாலையில் நடைபெற்ற தீ தடுப்பு ஒத்திகையை தமிழ்நாடு தொழிற்சாலை பாதுகாப்புத் துறை கூடுதல் இயக்குநா் சித்தாா்த்தன் மற்றும் இணை இயக்குநா் மாலதி ஆகியோா் தொடங்கிவைத்து ஆலோசனை வழங்கினா்.
இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் ஊழியா்களுக்கு பயிற்சி அளித்தனா். இதில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தற்காத்துக் கொள்வது மற்றும் தீயில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் முறை மற்றும் தீயணைப்பான்களை கையாள்வது, மேலும் பேரிடா் மீட்பு செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திரளான தொழிலாளா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.