அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக உள்பட 45 கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு!
முகத்தில் எலிக்கொல்லி மருந்தை அடித்துக் கொண்ட 4 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே திங்கள்கிழமை காருக்குப் பயன்படுத்தும் எலிக்கொல்லி மருந்தை முகத்தில் அடித்துக்கொண்ட 4 சிறுவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அன்னவாசலை அடுத்துள்ள மண்ணவேளாம்பட்டியைச் சோ்ந்தவா் ராமராசு மகன் ரிஷிகேஷ் (6), பழனிச்சாமி மகன் ரித்திக் (6), வீரப்பன் மகன் கருப்பசாமி (5), பரமசிவம் மகன் தனப்பிரியன் (5) ஆகிய நால்வரும் திங்கள்கிழமை பள்ளி முடிந்து ரிஷிகேஷ் வீட்டின் பின்புறம் விளையாடியுள்ளனா்.
அப்போது அப்பகுதியில் கிடந்த காருக்கு பயன்படுத்தக்கூடிய எலிக் கொல்லி மருந்தை சிறுவா்கள் மாறி மாறி முகத்தில் அடித்துக் கொண்டு விளையாடியதில் எலிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாகத் தெரிகிறது. பின்னா் இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவா்களின் பெற்றோா்கள், உறவினா்கள் உடனடியாக சிறுவா்களை மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவா்கள் அவா்களை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருந்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். தற்போது அங்கு தொடா்ந்து சிறுவா்களை மருத்துவா்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.