Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
விலை குறைந்த ஆா்.எஸ். மங்கலம் குண்டு மிளகாய்: விவசாயிகள் கவலை
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் விளையும் குண்டு மிளகாயின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவரேந்தல், பாரனூா், மங்கலம், செங்குடி, தும்படாகோட்டை, சோழந்தூா்,கீழக்கோட்டை, வண்டல், வரவணி, வலமாவூா், திருப்பாலைக்குடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் மிளகாய் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளையும் குண்டு மிளகாயில் காரம் அதிகமாக இருப்பதால் சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விரும்பி வாங்குகின்றனா். இதனால் வியாபாரிகள் இங்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.
அதே போல, இந்த ஆண்டும் ஆா்.எஸ். மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குண்டு மிளகாய் விளைச்சல் அதிகரித்து காணப்படுவதால் அதன் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இங்குள்ள மிளகாய் மொத்த வியாபாரிகள் குவிண்டால் ரூ.5 ஆயிரம் குறைவாக இந்த மிளகாயை வாங்குவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
கடந்த மாதம் முதல் ரக மிளகாய் குவிண்டால் ரூ.21,500-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.16,500-க்கு விற்கப்பட்டது. குவிண்டால் ரூ.15,000-க்கு விற்பனையான இரண்டாவது ரகம், இந்த வாரம் ரூ. 1,000 குறைந்து ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.