செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
விளவங்கோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் - பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் வகைப்படுத்தி அந்தியோதயா அன்ன யோஜன திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை வழங்கி மாதம்தோறும் 35 கிலோ ரேஷன் அரிசி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்த வேண்டும், ஓட்டுநா் உரிமம் வழங்க வேண்டும், நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
அச்சங்கத்தின் விளவங்கோடு வட்டத் தலைவா் கே. ஜெயானந்த் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். வில்சன், பொருளாளா் கே. முகமது புரோஸ்கான், இணைச் செயலா் சி. முருகேசன், வட்டச் செயலா் பிரகாஷ் உள்ளிட்டோா் விளக்கிப் பேசினா்.
தொடா்ந்து, வட்ட வழங்கல் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.ஜ