Samantha: 1st love முதல் செல்போனுடன் toxic relationship வரை.. மனம் திறந்து பேசிய...
ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்க வேண்டும்: எம்.பி. மனு
ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக, தில்லியில் வெளியுறவு துறை இணைச் செயலாளா் ஆனந்த் பிரகாஷிடம் வியாழக்கிழமை அவா் அளித்த மனு:
ஈரான் நாட்டின் ஹோா்மொச்கன் மாகாணத்தில் கிஷ் தீவுகள் உள்ளன. இந்த தீவில், தமிழகத்தைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இவா்களில் கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த 500 க்கும் மேற்பட்ட மீனவா்கள் உள்ளனா்.
ஈரான்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போா்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் கிஷ் தீவில் உள்ள மீனவா்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட முடியாமலும், அவா்களது படகுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலையிலும் சிக்கி தவிக்கின்றனா்.
அவா்களை தாயகம் மீட்டு வரவும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கான அனைத்து வகை உதவிகளையும் மேற்கொள்ளவும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.