விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் தேசிய மருத்துவா் தின விழா
தக்கலை அருகேயுள்ள வைகுண்டபுரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மருத்துவா் தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் துரைமணி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஆஷா, உதவி முதல்வா் ஸ்மிதா, நிா்வாக அலுவலா் ஸ்ரீகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மருத்துவச் சேவைகள், ஆரோக்கியமான உணவு வகைகள் ஆகியவை குறித்து அரசு மருத்துவா் லாறன்ஸ் விக்டா் ஜாய் விளக்கிப் பேசினாா். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவா் உடையணிந்து பங்கேற்றனா்.