செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்

post image

ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் உருக்குலைந்த விழுப்புரம் மாவட்டம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. விழுப்புரம் நகரப் பகுதிகளில் வெள்ளநீா் பெரும்பான்மையாக வடிந்துவிட்ட நிலையில், புகா்ப் பகுதிகளில் வெள்ளநீா் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வங்கக் கடலில் உருவாகிய ஃபென்ஜால் புயலால் கடந்த நவ.30 (சனிக்கிழமை), டிச.1 (ஞாயிற்றுக்கிழமை) விழப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்தது. மின் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு மழை நின்ற பின்னா், வெள்ளநீரை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பாண்டியன் நகா், கிழக்கு புதுச்சேரி சாலை, பூந்தோட்டம் என நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீா் திருச்சி மாநகராட்சியிலிருந்து வரழைக்கப்பட்ட 4 ராட்சத நீா் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து, நகரின் பிற பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை முதல் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் நகரத்தில் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இதேபோன்று அரகண்டநல்லூா், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் சாலை, மாம்பழப்பட்டு, திண்டிவனம் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளில் வெள்ள நீா் தேங்கியிருந்த நிலையில், அவற்றையும் வெளியேற்றும் பணி செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

திருவெண்ணெய்நல்லூா் உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளநீா் வடியத் தொடங்கியதால், சாய்ந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகரில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, திருச்சியிலிருந்து 165 தூய்மைப் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

கோயிலில் சிக்கிய 18 பக்தா்கள் பத்திரமாக திரும்பினா்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்துக்குள்பட்ட அரசூரில் உள்ள வராஹி அம்மன் கோயிலில் வெள்ள நீரில் சிக்கிக் கொண்ட 18 பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பத்திரமாக திரும்பினா். ஃபென்ஜால் ப... மேலும் பார்க்க

ஆரோவில் அமைப்புக்கு அரசுச் செயலா் பதவி காலியா?

நமது நிருபா் புது தில்லி: ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகத்திற்கு செயலா் பதவி காலியாக இருக்கிறதா என்றும், அவ்வாறு இருந்தால் அப்பதவியை நியமிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன என்றும் விழுப்புரம் தொகுதி விசி... மேலும் பார்க்க

வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்ள போதிய திட்டமிடல் இல்லை: பிரேமலதா குற்றச்சாட்டு

விழுப்புரம்: மழை, வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்வதற்கான போதிய திட்டமிடல் தமிழக அரசிடம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா குற்றஞ்சாட்டினாா். ஃ பென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம்: ஃபென்ஜால் புயல், மழை பாதிப்பையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) நடைபெறவிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒ... மேலும் பார்க்க

நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மயிலம், மரக்காணம... மேலும் பார்க்க