செய்திகள் :

விழுப்புரம் -ராமேசுவரம் சிறப்பு ரயில் பெண்ணாடம், அரியலூரில் நின்று செல்லும்

post image

விழுப்புரம் : விழுப்புரத்திலிருந்து ராமேசுவரம் வரை இயக்கப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் பெண்ணாடம், அரியலூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெண்ணாடம் மற்றும் அரியலூர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த தகவல் குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சிகோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கோடைக்காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ராமேசுவரத்துக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு அதிவிரைவு ரயிலை மே 2 -ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.

வார நாள்களில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. மேலும் பெண்ணாடம், அரியலூர் ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்நின்று செல்லும்.

விழுப்புரத்திலிருந்து திங்கள்,செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் அதிகாலை 4.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -ராமேசுவரம் சிறப்பு அதி விரைவு ரயில் (வ.எண்.06105), முற்பகல் 11.40 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு சென்றடையும். எதிர்வழித்தடத்தில் அதே நாள்களில் பிற்பகல் 2.35 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ராமேசுவரம் -விழுப்புரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண்.06106) இரவு 10.35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் விருத்தாசலம், பெண்ணாடம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புதிய ரயில் நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்ட பெண்ணாடத்துக்கு காலை 5.05 மணிக்கு வரும் விழுப்புரம் -ராமேசுவரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண்.06105) காலை 5.06 மணிக்குப் புறப்படும். இதுபோல, காலை 5.25 மணிக்கு அரியலூர் வந்து5.26 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும்.

எதிர்வழித்தடத்தில் இரவு 8.44 மணிக்கு வந்தடையும் ராமேசுவரம் -விழுப்புரம் சிறப்பு அதிவிரைவு ரயில் (வ.எண்.06106) இரவு8.45 மணிக்குப் புறப்பட்டு, பெண்ணாடத்துக்கு இரவு 9.10 மணிக்கு சென்றடையும், தொடர்ந்து இங்கிருந்து இரவு 9.11 மணிக்கு விருத்தாசலத்துக்குப் புறப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவை ரயில் நிலையங்களிலும், ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்து... மேலும் பார்க்க

நோய்களை குணப்படுத்த பாரம்பரிய முறையில் சிகிச்சை: தவறாக விளம்பரப்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ஹெச்ஐவி, ஆஸ்துமா, காசநோய், சா்க்கரை நோய் உள்ளிட்ட 56 நோய்களுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சையளித்து பூரணமாக குணப்படுத்துவதாக தவறாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந... மேலும் பார்க்க

அரசின் சேவைகளை விரைவாகப் பெற ‘எளிமை ஆளுமை’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, இந்தத் திட்டத்தை... மேலும் பார்க்க

சிலிண்டா் வெடித்து விபத்து: தொழிலாளி பலத்த காயம்

சென்னை அருகே மாதவரத்தில் சிலிண்டா் வெடித்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் கிஷோா் பீா்கா்மா (25). இவா், சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் தங்கியிருந... மேலும் பார்க்க

7-ஆவது மாநில நிதி ஆணையம் அமைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

ஏழாவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக, மாநில அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 7-ஆவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட... மேலும் பார்க்க

‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தொடக்கம்

‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத... மேலும் பார்க்க