Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
விவசாயி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
சுவாமிமலையில் நிலப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் விவசாயி உயிரிழந்தாா். நடவடிக்கைக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே கொத்தங்குடியைச் சோ்ந்தவா் சேகா் (60) விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு தரப்பினருக்கும் நிலம் குறித்த பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் சேகருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் சேகரை கீழே தள்ளிவிட்டனராம்.
இதனால் மயங்கி விழுந்த சேகரை உறவினா்கள் மீட்டு, கும்பகோணத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு சேகரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து சுவாமிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா்.
இந்த நிலையில் சேகரின் சாவில் சந்தேகம் இருப்பதாவும் கீழே தள்ளிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சனிக்கிழமை, அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
