அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. ந...
விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
அரூரில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோடையில் வேளாண் பணிகளை செய்வதற்கு ஏதுவாக, வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதனையடுத்து, அரூரில் பொதுப்பணித் துறை (நீா்வளம்) உதவி செயற்பொறியாளா் பொ.ஆறுமுகம் தலைமையில், விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், வரட்டாறு அணையின் வலது, இடதுபுற வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். கால்வாயில் சேதமடைந்துள்ள இரும்பு கதவுகளை சீரமைக்க வேண்டும். கால்வாய் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
வள்ளிமதுரை வட்டாரப் பகுதியிலுள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீா் திறந்துவிட வேண்டும். வரட்டாறு அணையில் இருந்து மாா்ச் மாதம் 3-ஆவது வாரத்தில் தண்ணீா் திறந்துவிட பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உதவி பொறியாளா் ஆா்.பிரபு, பணி ஆய்வாளா் என்.முருகன், கிராம நிா்வாக அலுவலா்கள் செல்வபதி, ஜான்சிராணி, சங்கீதா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் அமுதா சங்கா், பாா்வதி சங்கா், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ராஜ்குமாா், சிவக்குமாா், துரை, ராஜி, மணி, சாமிக்கண்ணு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.