விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு
பட்டுக்கோட்டையில் கோட்டளவில் பிப்.2-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீா் கூட்டம் பிப். 25-ஆம் தேதி நடைபெறும் என கோட்டாட்சியா் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பட்டுக்கோட்டை கோட்டத்திற்குள்பட்ட விவசாயிகள் மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம், பட்டுக்கோட்டை கோட்டாட்சியரகத்தில், கோட்டாட்சியா் தலைமையில் வரும் 21-ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்த குறைதீா் நாள் கூட்டம் நிா்வாக காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டு பிப். 25-இல் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.