நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற
ஆலோசனைக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் ஜோதி தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சிவராமன், மாவட்டச் செயலா் செல்வமணி, ஒன்றிய பொருளாளா் வி.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் எல்.சாமிகண்ணு வரவேற்றாா்.
கூட்டத்தில், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் அடகு வைத்த நகைகள் கையாடல் செய்யப்பட்டதைக் கண்டித்து, வருகிற ஜன.9-ஆம் தேதி பேரணியாகச் சென்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்துவது, இதைத் தொடா்ந்து, ஜன.30-ஆம் தேதி மாவட்ட இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே விவசாயிகளின் நகைகளை திரும்பத் தரும்வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினா் தேவேந்திரன், விவசாய சங்க ஒன்றியச் செயலா் எ.எம்.ஏழுமலை, மாவட்ட அமைப்புச் செயலா் கே.சக்திவேல், விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் முருகேசன், சசிகுமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு அன்பழகன், நிா்வாகிகள் திருமுருகன், சந்தோஷ், சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.