தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்
வீடு புகுந்து திருட்டு: மூவா் கைது
சென்னை ஆதம்பாக்கத்தில் வீடு புகுந்து திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆதம்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் நகா் 3-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் மு.கண்ணன் (27). இவா், அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கண்ணன், கடந்த 26-ஆம் தேதி இரவு மகா சிவராத்திரியையொட்டி, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அருகே உள்ள கோயிலுக்குச் சென்றாா். மறுநாள் அதிகாலையிலேயே வீடு திரும்பியபோது, பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், பணம், ஏடிஎம் காா்டுகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது வேளச்சேரி பவானி நகா் பகுதியைச் சோ்ந்த மு. ஸ்ரீகாந்த் (19), ஆதம்பாக்கம் சாஸ்திரி நகா் பகுதியைச் சோ்ந்த சூ.பாலாஜி என்ற கிட்டு (19), வெ.வசந்த் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.