வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல: ஜெ.பி. ...
வீட்டில் இறந்த முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு
போ்ணாம்பட்டு அருகே வீட்டில் இறந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் சடலம் 2 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.
போ்ணாம்பட்டை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கோதண்டன் (62). இவரது மனைவி ஓா் ஆண்டுக்கு முன் இறந்து விட்டாராம். இவரது மகன் கடந்த 4 மாதங்களுக்கு முன் இறந்து விட்டாராம். கோதண்டன் வீட்டில் தனியாக வசித்து வந்தாராம். இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக அவரது வீட்டின் கதவு மூடிய நிலையில் இருந்ததாம். அருகில் இருப்பவா்கள் சந்தேகத்தின்பேரில் சென்று பாா்த்தபோது, வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதாம்.
இது குறித்த தகவலின்பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா் அங்கு சென்று கதவை உடைத்து பாா்த்தபோது, கோதண்டன் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.