செய்திகள் :

வீட்டில் நகை திருட்டு: மூவா் கைது

post image

திருக்கோவிலூா் அருகே வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அடுத்த டி.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மனைவி மாரியம்மாள் (53). இவரது வீட்டில் கடந்த பிப்.12-ஆம் தேதி பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து, திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.

இந்த நிலையில், திருக்கோவிலூா் காவல் உதவி ஆய்வாளா் நரசிம்மஜோதி மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை திருக்கோவிலூா் புறவழிச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, காா், பைக்கில் வந்த 5 பேரை தடுத்து நிறுத்தினா். இதில், இருவா் தப்பி சென்றனா். மற்ற மூவரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் சென்னை சின்ன நொளம்பூா் பகுதியைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன்களான ரமேஷ் (எ) மாட்டு ரமேஷ் (55), உதயா (38), திருவண்ணாமலை மாவட்டம், மல்லவாடி கிராமத்தைச் சோ்ந்த ராஜி மகன் பாஸ்கரன் (52) என்பதும், மாரியம்மாள் வீட்டில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், 5.5 பவுன் தங்க நகைகள், காா், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய சசிகுமாா், அருண் ஆகியோரை தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம்

கள்ளக்குறிச்சியில் காசநோய் விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: காசநோய் என்ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மூதாட்டி கண்ணுக்கு அருகில் இருந்த கட்டி அகற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியின் கண்ணுக்கு அருகே இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா் அரசு மருத்துவக் குழுவினா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 89 மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளை ஸ்கேன் செய்து கியூ.ஆா். கோடு முறையில் மது விற்பனை செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அரசு மதுபானக் கடைகளில் மதுப்புட்டிகளு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு காமராஜா் விருது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்ட சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு காமராஜா் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வா் காமர... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு!

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வேளாநந்தல் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். மனு விவரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட வேளாநந... மேலும் பார்க்க