`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
வீரசிகாமணி, புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை
வீரசிகாமணி, புளியங்குடி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீரசிகாமணி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், செப். 6 காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை
வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோவில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதே போல, புளியங்குடி உபமின் நிலையப் பகுதிகளான புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.