செய்திகள் :

வெறும் கீறல் மட்டுமே! ராக்கெட் வெடித்துச் சிதறிய விபத்தில் எலான் நகைச்சுவை?

post image

அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்துச் சிதறியதை நகைச்சுவையாகச் சித்திரித்து, எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் இன்று (வியாழக்கிழமை) சோதனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் இந்த ராக்கெட் சோதனையை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், இன்று சோதனை நேரத்துக்கு சற்று முன்பாக என்ஜின் இயக்கப்பட்ட நிலையில் ராக்கெட் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்பாகவும் புகைமூட்டமாகவும் காணப்பட்டது. இது தொடர்பான சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இருப்பினும், ராக்கெட் வெடித்துச் சிதறிய விபத்தைக் குறிப்பிட்ட எலான் மஸ்க், வெறும் கீறல் மட்டும்தான் என்று குறிப்பிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த இந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை வருகிற ஜூன் 29 ஆம் தேதி விண்ணுக்கு அனுப்ப ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:4கே தொழில்நுட்பத்தில் காஸாவில் நிகழும் இனப்படுகொலை..! இஸ்ரேலுக்கு எதிராகப் பேசிய நடிகர்!

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! - பாகிஸ்தான் ராணுவத் தளபதி பரிந்துரை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் வலியுறுத்தியுள்ளார்.5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் ... மேலும் பார்க்க

ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை: பாகிஸ்தான்

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் த... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை!

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பீரங்கி எதிர்புப் படையின் தளபதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. லெபானின் தெற்குப் பகுதியிலுள்ள நபாட்டியா மாகாணத்தில், இஸ்ரேல் ராண... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு சீனா, ரஷியா கண்டனம்! இரு நாட்டு அதிபர்கள் விவாதம்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - ஈரான் போரால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மை நிலவி வருகிறது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 நாட... மேலும் பார்க்க

நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்கள்!

இஸ்ரேல் பிரதமர் செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஈரானின் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது தலை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து..! இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்ப... மேலும் பார்க்க