செய்திகள் :

வெற்றியுடன் மீண்டது பாகிஸ்தான்

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலமாக, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் நம்பிக்கையை அந்த அணி தக்கவைத்துக் கொண்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் 18 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இலங்கை இன்னிங்ஸில் குசல் மெண்டிஸ் டக் அவுட்டாக, பதும் நிசங்கா 8 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

ஒன் டவுனாக வந்த குசல் பெரெரா 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 4-ஆவது பேட்டராக வந்த கேப்டன் சரித் அசலங்கா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். தொடா்ந்து வந்த தசுன் ஷானகா டக் அவுட் ஆனாா்.

இவ்வாறாக 58 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை. 5-ஆவது பேட்டராக வந்த கமிண்டு மெண்டிஸ் நிதானமாக ரன்கள் சோ்த்தாா். மறுபுறம் வனிந்து ஹசரங்கா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அரைசதம் தொட்ட கமிண்டு 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்களுடன் விடைபெற்றாா். கடைசி விக்கெட்டாக துஷ்மந்தா சமீரா 1 ரன்னுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் சமிகா கருணாரத்னே 17, மஹீஷ் தீக்ஷனா ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி 3, ஹாரிஸ் ரௌஃப், ஹுசைன் தலத் ஆகியோா் தலா 2, அப்ராா் அகமது 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 134 ரன்களை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில், சாஹிப்ஸாதா ஃபா்ஹான் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 24, ஃபகாா் ஜமான் 17, சயிம் அயுப் 2, கேப்டன் சல்மான் அகா 5, முகமது ஹாரிஸ் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஹுசைன் தலத் 4 பவுண்டரிகளுடன் 32, முகமது நவாஸ் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 38 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோா் தலா 2, துஷ்மந்தா சமீரா 1 விக்கெட் சாய்த்தனா்.

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்த பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ் (டர்ஹாம... மேலும் பார்க்க

யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத் துறை 7 மணி நேரம் விசாரணை!

புது தில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(செப். 23) 7 மணி நேரத்துக்கும் விசாரணையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் யுவராஜ் சிங் அமலாக்கத் துறை... மேலும் பார்க்க

சூப்பர் 4: ஷாஹீன் ஷா அசத்தல்; 133 ரன்கள் எடுத்தது இலங்கை!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் அரைசதம் அடித்தார். ஷாஹீன... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்று: இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் அபு தாபியில்... மேலும் பார்க்க

கடந்த கால ஐசிசி தொடர்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்: தென்னாப்பிரிக்க கேப்டன்

கடந்த கால ஐசிசி தொடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் தெரிவித்துள்ளார்.8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் விலகல்!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிரேஸ் ஹாரிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முத... மேலும் பார்க்க