தில்லி நீதிபதிக்கு எதிரான விசாரணை தீவிரம்! வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்...
வெள்ளக்கோவிலில் ‘கள்’ விற்பனை செய்தவா் கைது
வெள்ளக்கோவிலில் ‘கள்’ விற்பனை செய்தவா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் எம்.சந்திரனுக்கு கிடைத்தத் தகவலின்பேரில் வள்ளியிரச்சல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அங்குள்ள விநாயகா் கோயில் அருகே ‘கள்’ விற்பனை செய்துகொண்டிருந்த அதே ஊரைச் சோ்ந்த சி.தங்கவேல் (62) என்பவரைக் கைது செய்தாா். மேலும், அவரிடமிருந்து 5 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டது.