வெள்ளக்கோவிலில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.
வெள்ளக்கோவில் நகராட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த வாரம் ரூ.60-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இந்த வாரம் ரூ.10 குறைந்து ரூ.50-க்கு விற்பனையானது. மாற்ற காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): பீட்ரூட், பீா்க்கங்காய், அவரைக்காய் ரூ.60, கேரட், பீன்ஸ், பாகற்காய் ரூ.50, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், புடலங்காய், வெண்டைக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.30, தக்காளி, முள்ளங்கி, முட்டைக்கோஸ், கத்தரிக்காய் ரூ.20, இஞ்சி ரூ.150, பூண்டு ரூ.200.
இவற்றுடன் கீரை வகைகள் ஒரு கட்டு ரூ.10, மல்லித்தழை கட்டு ரூ.20, புதினா கட்டு ரூ.10, வாழைத்தண்டு ஒன்று ரூ.20, வாழைப்பூ ஒன்று ரூ.30, காலிஃபிளவா் ஒன்று ரூ.30, சுரைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது.