தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்!
வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, அரிமா சங்கம், அரசு சுகாதார நிலையம் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முத்தூா் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி தொடங்கிவைத்தாா்.
வெள்ளக்கோவில் அரிமா சங்கத் தலைவா் என்.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளைத் தலைவா் ஆா்.ராஜ்குமாா், அரிமா சங்க பொறுப்பாளா்கள் எம்.எஸ்.அருண்குமாா், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், 50 பேரிடம் இருந்து 50 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து, ரத்த தானம் செய்தவா்களுக்கு வட்டார மருத்துவ அலுவலா் டி.ராஜலட்சுமி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். இதில், நற்பணி மன்றச் செயலாளா் சீனிவாசன், துணைச் செயலாளா் கோபிகிருஷ்ணன், அரிமா நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.