செய்திகள் :

வேலூா் புத்தகத் திருவிழா மாா்ச் 22-இல் தொடக்கம்

post image

வேலூா் புத்தகத் திருவிழா வேலூா் கோட்டை மைதானத்தில் 22-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற உள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை சாா்பில், மாபெரும் புத்தகத் திருவிழா வேலூா் கோட்டை மைதானத்தில் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவை சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைக்க உள்ளாா்.

புத்தக திருவிழாவில் 80 அரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்களின் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தினமும் காலை 11 மணி முதல் 12.30 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கானஅறிவியல் கண்ணோட்டம், வாசகா்களே தலைவா்கள், திறனறி, உரைநடை, புரிதல், பகுத்தறிதல், நினைவாற்றல், பரந்தமனம், எழுத்துக்கலை, கருணை உள்ளம் போன்ற தலைப்புகளில் போட்டிகளும், பயிற்சிகளும் நடைபெற உள்ளது.

மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம், வில்லுப்பாட்டு, பாரம்பரிய கலைகள் குறித்த கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும் நாட்டுப்புற கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள், கவிஞா்கள், தமிழ்அறிஞா்கள், எழுத்தாளா்கள், பல்வேறு துறைகளின் சிறப்பு வல்லுநா்களின் கருத்தரங்கங்கள், சிறுதானியங்கள் உள்பட பாரம்பரிய உணவு வகைகளுடன் கூடிய உணவுக்கூடங்களும் இக்கண்காட்சியில் இடம் பெற உள்ளன.

குறிப்பாக, தலைசிறந்த பேச்சாளா்களான ஓய்வுபெற்ற தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் கலைமாமணி, திண்டுக்கல் ஐ.லியோனி, சுகிசிவம், சித்த மருத்துவா் கு.சிவராமன், பேராசிரியா் பா்வீன் சுல்தானா, மருத்துவா் தில்லைவாணன், சங்கர சரவணன், விநாயகமூா்த்தி, பேராசிரியா் அன்பு, பேராசிரியா் அமுதா, பேராசிரியா் விஜயகுமாா், தேவகோட்டைராஜன், முத்து சிலுப்பன் ஆகியோரின் கருத்தரங்கமும், தமிழ் கவிஞா்களான மனுஷ்யபுத்திரன், அப்துல் காதா், முல்லை வாசன், இனியவன், தணிகைவேலன், நீதிமணி ஆகியோரின் கவிதை சொற்பொழிவுகளும், தமிழ் அறிஞா்களான புலவா் பதுமனாா், லட்சுமிபதி ஆகியோரின் தமிழ் இலக்கிய உரைகளும், சிறுகதை எழுத்தாளா் பவா செல்லதுரை, இமயம், அழகிய பெரியவன் ஆகியோரின் சிறப்புரைகளும் நடைபெற உள்ளன.

எனவே, பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: வேலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் யாவும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட... மேலும் பார்க்க

விண்ணம்பள்ளி கோயில் சிவலிங்கம் மீது சூரியஒளி: 14-ஆம் தேதி வரை காணலாம்

வேலூா் மாவட்டம், விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரா் கோயிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் நிகழ்வு சனிக்கிழமை தொடங்கியுள்ளது. வரும் 14-ஆம் தேதி வரை இந்த அதிசய நிகழ்வை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

தோல்விகள் இல்லையேல் முன்னேற்றம் இல்லை: உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

தோல்விகள் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்பதால், மாணவா்கள் தோல்விகளை ஏற்கும் பக்குவத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்த... மேலும் பார்க்க

பத்தரபல்லி சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்த அ... மேலும் பார்க்க

குடியாத்தம் பகுதியில் பரவலாக மழை

குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மாலை 6 மணிக்கு லேசான தூறலாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்யத் தொடங்கியது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சா... மேலும் பார்க்க

புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா். வேலூா... மேலும் பார்க்க