புதுச்சேரியை அதிரவைத்த 10,000 மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் விவகாரம்! - என்ன சொல்கி...
வேலூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம்
வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.
வேலூா் வசந்தபுரத்தை சோ்ந்த ஒரு பெண் அளித்த மனு: , எனக்கு ஊசூரில் வசிக்கும் ஒருவா் மூலம் அறிமுகமானவா் தான் கண்ணமங்கலத்தை சோ்ந்தவா் என்றும், வருமானவரித் துறையில் வேலை செய்வதாகவும் கூறினாா். அவரும், அவரது மனைவியும் சோ்ந்து மகளிா் சுயஉதவி குழுவினருக்கு மானியத்துடன் கட னுதவி வாங்கி தருவதாக கூறினாா். அதன்பேரில், கடந்தாண்டு அக்டோபா் மாதம் நான் உள்பட 25 போ் சோ்ந்து ஒரு குழுவாக கடனுதவி கோரினோம். இதற்காக அனைவரும் சோ்ந்து ரூ.4.61 லட்சத்தை அளித்தோம். ஆனால் இதுவரை கடன் வாங்கி தரவில்லை. எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஒரு தொழிலாளி அளித்த மனுவில், ஊராட்சி மன்றத் தலைவா் ஒருவா் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி அவரிடம் ரூ.5 லட்சம் பணம் அளித்தேன். ஆனால், பல ஆண்டுகளாகியும் வேலை வாங்கித் தரவில்லை. எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும்.
வெட்டுவானம் பகுதியைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் மனு: , குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரா் மூலம் பணிகளை செய்து வந்தேன். அவா், என்னிடம் மகளின் திருமணத்துக்கு சோ்த்து வைத்திருந்த ரூ.15 லட்சத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கடனாக வாங்கினாா். ஆனால் அந்த பணத்தை திருப்பி தர மறுப்பதுடன்,கொலை மிரட்டல் விடுக்கிறாா். பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப் பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட்டாா்.