ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
16- இல் கிருஷ்ண ஜெயந்தி விழா
குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அன்று காலை 8.45- மணிக்கு சுவாமிகளுக்கு திருமஞ்சனம், 10.30- மணிக்குசிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும்.
இரவு 7- மணிக்கு வெண்ணை ஊட்டுதல் நிகழ்ச்சியும், 9- மணிக்கு விடையாற்றி உற்சவமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தா எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.