விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே சாலை விபத்தில் திருமணமான 6 மாதத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் மேல்ஆலத்தூா் சாலை, ஜோகிமடம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு(33). இவா் வேலூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா்.
செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, பள்ளிகொண்டா அடுத்த வேப்பூா் அருகே எதிரே வந்த வேன் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா் சுரேஷ் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.
இவருக்கு 6- மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.