வேலை... வேலை... வேலை... அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மார்ச் 21 முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 போக்குவவரத்துக் கழகங்கள் மூலமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. நகர், புறநகர் என அனைத்துப் பகுதிகளுக்கும் சேவை இருப்பதால் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் போக்குவரத்துக் கழக பேருந்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் சேவை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் வேலை!
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகத்தில்(எம்டிசி) 364 காலியிடங்கள், விரைவு போக்குவரத்துக் கழகத்தில்(எஸ்இடிசி) 318 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை(மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளோர் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.