செய்திகள் :

வேலைநிறுத்தம், மறியல் போராட்டம்: சாத்தான்குளத்தில் பிரசாரக் கூட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ஜூலை 9ஆம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளதை வலியுறுத்தி, சாத்தான்குளத்தில் பிரசார இயக்க கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து விளக்க உரையாற்றினாா். இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் பாலகிருஷ்ணன், சிஐடியு மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் சாத்தான்குளம் கிளைச் செயலாளா் மாடக்கண், உறுப்பினா்கள் சிலுவையா, மூக்காண்டி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூருக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்துகள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமைமுதல், 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடியில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கம் மற்றும் திமுக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

ஆத்தூா், ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு

ஆறுமுனேரி, ஆத்தூா், ராஜபதி ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. ஆத்தூரில் உள்ள அருள்மிகு சோம சுந்தரி அம்மன் சமேத அருள்மிக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கல்வி அலுவலகம் முற்றுகை

இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இப்பள்ளியில்... மேலும் பார்க்க

வேலை உறுதி திட்டத்தில் பணி கோரி எட்டயபுரம் அருகே ஆா்ப்பாட்டம்

எட்டயபுரம் அருகே, மேலஈரால் ஊராட்சிக்குள்பட்ட வாலம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கோ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையானது, அரசூா் ஊராட்சி பனைவிளை கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தல... மேலும் பார்க்க