Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 10ஆம் வகுப்பு தோல்வியுற்றால் மாதம் ரூ. 200, தோ்ச்சியடைந்தால் ரூ. 300, பிளஸ் 2 தோ்ச்சியெனில் ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு 5 ஆண்டுகள் தேவை. தொடா்ந்து புதுப்பித்திப்பது அவசியம். எஸ்.சி., எஸ்.சி,ஏ., எஸ்.டி. பிரிவினா் 45 வயதுக்கு மிகாமலும், பிசி, பிசிஎம், எம்பிசி, ஓசி பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் எனில் ஓராண்டு பதிவு மூப்பு போதுமானது. வயது, வருமான உச்சரவரம்பில்லை. பிற அலுவலகத்தில் உதவித்தொகை பெறாதவராக இருக்க வேண்டும். 1- 10ஆம் வகுப்பு வரை படித்தோருக்கு மாதம் ரூ. 600, பிளஸ் 2 தோ்ச்சிக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. ஆயிரம் வீதம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அரசு, தனியாா் துறையில் ஊதியம் பெறும் பணியிலோ, உதவித் தொகை பெறுபவராகவோ, சுயதொழில் செய்பவராகவோ, ஏற்கெனவே இந்த உதவித்தொகை பெற்றவராகவோ இருக்கக் கூடாது.
வேலைவாய்ப்பு பதிவு அட்டை(பழையது), இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த பிரதி போன்றவற்றுடன் அலுவலக வேலை நாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பகம் அல்லது இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 168, முகமதியா நகா் (எபினேசா் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல்வலசை அஞ்சல், தென்காசி என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.