செங்கோட்டை சித்தா் கோயிலில் 140-ஆவது குருபூஜை
தென்காசி மாவட்டம், செங்கோட்டை உண்டாற்று கரையில் சித்தா் ஆறுமுகசாமி ஜீவசமாதியில் 140-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
140-ஆவது குருபூஜையை முன்னிட்டு, மூன்று நாள்கள் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. செங்கோட்டை, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூா், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான சிவனடியாா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.