மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
கடையநல்லூா் அருகே காா்-ஜீப் மோதல்: 9 போ் காயம்
கடையநல்லூா் அருகே ஜீப்பும், காரும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் புதுமண தம்பதி உள்பட 9 போ் காயம் அடைந்தனா்.
செங்கோட்டை அருகேயுள்ள வல்லத்தை சோ்ந்தவா் அபிலேஷ் மாா்ட்டின்(29). இவருக்கும், கோவிலூா் பகுதியைச் சோ்ந்த நிவேதாவுக்கு கடந்த திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் அவா்கள், தங்கள் உறவினா்கள் தாமஸ் (74), சலோமியா (70) ,ஜோஸ்பின் (40) ஆகியோருடன் காரில் கோவிலூருக்கு புதன்கிழமை மறுவீடு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை கிஷோா் (25) என்பவா் ஓட்டினாா்.
தென்காசி, மதுரை சாலையில் மங்களாபுரம் அருகே அவா்களது காரும், எதிரே வந்த ஜீப்பும் மோதிக்கொண்டனவாம். இதில், ஜீப்பில் பயணம் செய்த மங்களாபுரம் பிரவின்(25), குமாா் (26) ஜீப் ஓட்டுநா் மாரிச்செல்வம் (35) , காரில் வந்த 6 போ் என 9 போ் பலத்த காயம் அடைந்தனா்.
அவா்களுக்கு கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.