மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
தென்காசி மாவட்ட சமரச மையங்களில் செப். 30 வரை சிறப்பு முகாம்
தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சமரச தீா்வு மையங்களில் செப். 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த சிறப்பு முகாம் செப்.30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாமில், குடும்ப பிரச்னை, வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, வா்த்தக பிரச்னை, பாகபிரிவினை, நில ஆா்ஜிதம், இதர உரிமையியல், வாடகை தகராறு, தொழிலாளா் நலன் உள்பட பல்வேறு நிலுவை வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் தென்காசியிலும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆலங்குளம், சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய 3 வட்டங்களின் துணை சமரச தீா்வு மையங்களிலும் நிலுவை வழக்குகளை நேரடியாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ தாக்கல் செய்து தீா்வு காணலாம். செப்டம்பா் இறுதிக்குள் நிச்சயம் தீா்வு காணப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீா்வு மையம் செயல்படும் என, தென்காசி மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான பா.இராஜவேலு தெரிவித்துள்ளாா்.