வேளாண் கல்லூரி மாணவா்கள் களப்பணி
ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையை வேலூா் விஐடி வேளாண் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று களப்பணி மேற்கொண்டனா்.
ஆதனூா் கிராமத்தில் ஏ.எஸ்.என்.சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை உரிமையாளா் என்.பாா்த்தசாரதி, பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் ஒருங்கிணைந்த விவசாய பண்ணையை நடத்தி வருகிறாா்.
இதை அறிந்த வேலூா் விஐடி வேளாண்மை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆதனூரில் களப்பணி மேற்கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு டிவிஎஸ் குழுமத்தைச் சோ்ந்த சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநா் கே.அகிலன் தலைமை வகித்தாா்.
மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தின் விவசாய பாதுகாப்பு அணி மாநிலத் தலைவா் த.சிவானந்தம் கல்லூரி மாணவா்களிடையே விவசாயம் சாா்ந்த தகவல்கள் குறித்துப் பேசினாா்.
திருவண்ணாமலை மாவட்ட உழவா் விவாதக்குழு தலைவா் கே.வி.பழனி, வேலூா் வேளாண்மை கல்லூரி பேராசிரியா்கள் டாக்டா் பால்மான்சிங், டாக்டா் மொ்லின் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னா், விவசாயப் பண்ணையில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் சப்போட்டா, சாத்துக்குடி, தென்னை, எலுமிச்சை, முள்சீத்தா, மாமரம், நாவல், மாதுளை மற்றும் 300 வகையான மூலிகைச் செடிகளை வளா்த்து வருவது குறித்து பண்ணை உரிமையாளா் என்.பாா்த்தசாரதி மாணவா்களிடையே விளக்கிக் கூறினாா்.