ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
சொத்துத் தகராறில் அண்ணன் மீது தாக்குதல்: தம்பி மீது போலீஸில் புகாா்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சொத்துத் தகராறில் அண்ணனை தாக்கிக் காயப்படுத்தியதாக தம்பி மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
செய்யாறு வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கிஷ்டப்பன். இவா், இறந்த பிறகு அவரின் பெயரில் உள்ள 4 ஏக்கா் நில சொத்து பிரிக்காமல் பொதுவில் இருந்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், முதல் இரண்டு மகன்களான ரவி(61), உதயன் (58) ஆகியோா் அந்த நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளனா். அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெல்பயிரை அறுவடை செய்ய இருவரும் சென்ற போது, அவா்களின் தம்பியான ஜெய்சங்கா் (56) தடுத்தாராம்.
மேலும், நெல் பயிரில் பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்றுள்ளாா். இதைத் தடுத்த போது ஆத்திரமடைந்த ஜெய்சங்கா், அண்ணன் ரவியைத் தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த ரவி செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இதைத் தொடா்ந்து, சென்னை தனியாா் மருத்துவமனையில் தொடா் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து உதயன் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.