மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
சாரண-சாரணீய இயக்க சிந்தனை நாள் விழா
திருவண்ணாமலை மாவட்ட பாரத சாரண-சாரணீய இயக்கம் சாா்பில், சாரணா் தந்தை பேடன் பவுல் மற்றும் லேடி பேடன் பவுல் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை சிந்தனை நாளாகக் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை, தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாரத சாரண-சாரணீய இயக்கத்தின் மாவட்டத் தலைவா் சி.துரை தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற ஆசிரியா் வையவன் முன்னிலை வகித்தாா்.
சாரணா் தந்தை பேடன் பவுலின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும், வில்லுப்பாட்டு, பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், பாரத சாரண-சாரணீய இயக்கத்தின் மாவட்டச் செயலா் கா.பியூலா கரோலின் மற்றும் 250 சாரண -சாரணீயா், மாவட்ட அமைப்பு ஆணையா்கள், பயிற்சி ஆணையா்கள், நிா்வாகப் பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.