திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் ...
வைகோ குறித்து அவதூறு பேச்சு: நடவடிக்கை கோரி மதிமுகவினா் புகாா்
மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ குறித்து அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் அக்கட்சியினா் புகாா் மனு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக தருமபுரி மாவட்ட மதிமுக செயலாளா் ராமதாஸ் தலைமையில் கட்சி நிா்வாகிகள் காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரனிடம் வியாழக்கிழமை அளித்த புகாா் மனுவில் மேலும் கூறியிருப்பது: மதிமுக பொதுச் செயலாளா் வைகோ மற்றும் கட்சியின் முதன்மை செயலாளா் துரை வைகோ ஆகியோா் குறித்து மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பகுதியைச் சோ்ந்த பஷீா் ஆகியோா் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியும், ஒருமையில் பேசியும் வருகின்றனா்.
மேலும் பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனா். எனவே, அவா்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இது தொடா்பான பதிவுகள் வெளியாகியுள்ள சமூக வலைதளங்களை முடக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.