ஷாஹீன் பாக் பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து
தில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அதிகாலை 2 மணியளவில் நானா சாலை அருகே நடந்த இந்தச் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், மூன்று முதல் நான்கு காா்கள் தீயில் கருகி நாசமாகியதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
அவா் மேலு்ம் கூறுகையில், ‘தீ விபத்தை தொடா்ந்து உடனடியாக எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, அதிகாலை 4 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது.
வீட்டுப் பொருள்கள், தரைத்தள வாகன நிறுத்துமிடத்தில் மூன்று முதல் நான்கு காா்கள் தீவிபத்தில் எரிந்தன’ என்றாா்.