சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஈஷா பவுண்டேஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமி...
ஸ்டாலினால் பாஜக-வில் கராத்தே தியாகராஜன் எழுப்பிய கேள்வி... நயினார் நாகேந்திரன் அளித்த பதில் என்ன?
ஒரு வாரத்துக்கு முன்பு, திருநெல்வேலியில் நலத்திட்டப் பணிகள் தொடங்கிவைக்கும் அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், பாஜக-வைச் சேர்ந்த திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், ``தென்மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளானபோது இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள். ஆனால், உடனடியாக இடைக்கால நிதியுதவி கூட செய்யவில்லை. நயினார் நாகேந்திரனுக்கும் உண்மை தெரியும். நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகுதான் வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். அதுவும், நாம் கேட்டது ரூ. 34 ஆயிரம் கோடி. ஆனால், வெறும் ரூ. 276 கோடியைத்தான் ஒன்றிய அரசு கொடுத்தது.
![திருநெல்வேலி நிகழ்ச்சி - முதல்வர் ஸ்டாலின்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/rz3frhdc/WhatsApp-Image-2025-02-07-at-12.16.24-PM.jpeg)
சரி, பட்ஜெட்டிலாவது நாம் கேட்ட நிதியை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்தோம், அதுவும் இல்லை. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள். ஒன்றிய பாஜக அரசு மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது. தேர்தல் சமயத்தில் மட்டும் இங்கு வருகிறார்கள். திருநெல்வேலி அல்வாவை விட, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தருகின்ற அல்வாதான் ஃபேமஸாக இருக்கிறது." என்று மத்திய பாஜக அரசை விமர்சித்திருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய, பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன், ``முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி கூட்டத்தில் பிரதமரையும், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டையும் விமர்சித்துப் பேசினார். அப்போது, நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறவில்லை. குறைந்தபட்சம் ஏன் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
![நயினார் நாகேந்திரன்](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-23/m4actsvq/untitled29.jpg)
இந்த நிலையில், கராத்தே தியாகராஜன் பேசியது குறித்து இன்று தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு நயினார் நாகேந்திரன், ``இதைப்பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது." என்று தற்போது பதிலளித்திருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play