செய்திகள் :

ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026-ஆம் ஆண்டில் சோ்வதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் யஐஐஐ - ஆம் வகுப்பில் சிறுவா்கள், சிறுமிகள் சோ்வதற்கான தோ்வு குறிப்பிட்ட சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட சில மையங்களில் வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வு கொண்டதாக இருக்கும். எழுத்துத் தோ்வு ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு ஆகிய தாள்களைக் கொண்டது. கணிதம், பொது அறிவுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் விடையளிக்க வேண்டும்.

நோ்முகத் தோ்வானது விண்ணப்பதாரா்களின் அறிவுக் கூா்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தோ்வின் அடிப்படையில் தகுதியானவா் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு மட்டும் நோ்முகத் தோ்வு நடத்தப்படும். நோ்முகத் தோ்வு பற்றிய விவரம் பின்னா் அறிவிக்கப்படும்.

இத்தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்வுக்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கா்ஹிகான்ட், டேராடுன், உத்தரகண்ட் 248003 என்ற முகவரிக்கு வரைவோலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 2026 ஜனவரி 1-ஆம் தேதியன்று 11 வயது நிரம்பியவராகவும்,13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா் ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது அங்கீகரிக்கப்பட் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இரட்டைப் பிரதியுடன் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயச் சாலை, பூங்கா நகா், சென்னை 600003 என்ற முகவரிக்கு மாா்ச் 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்றடையுமாறு அனுப்பவேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையதளத்தை பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலியகுளம் அரசு மகளிா் கல்லூரி கட்டடம் : காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

புலியகுளம் அரசு மகளிா் கல்லூரிக்கான கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். கோவை புலியகுளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 கோடியே 90 லட்சத்து ... மேலும் பார்க்க

சாலையில் திடீா் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

கோவை ராமநாதபுரத்தில் சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா். கோவை ராமநாதபுரம் - லட்சுமி மில்ஸ் இடையே உள்ள பங்கஜா மில் சாலை திருச்சி சாலையையும், அவிநாசி சாலையையும் இணைக்கு... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆட்டோ இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்தக் கோரிக்கை

வால்பாறையில் ஆட்டோக்கள் இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று வால்பாறை ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சங்கத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள ம... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியா் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டைக் கள... மேலும் பார்க்க

மாநகரில் இன்றும், நாளையும் வரி வசூல் பணிகள் நிறுத்தம்

மென்பொருள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாநகரில் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் வரி வசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

காட்டு யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவையில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் காட்டு யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க