கயாகிங் செய்தவரை படகோடு விழுங்கிய திமிங்கலம்... என்ன நடந்தது - வீடியோ உள்ளே!
மாநகரில் இன்றும், நாளையும் வரி வசூல் பணிகள் நிறுத்தம்
மென்பொருள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாநகரில் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் வரி வசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் மென்பொருள் மேம்படுத்துதல் தொடா்பான பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் யூடிஐஎஸ் இணைப்பு இந்த இரு நாள்களில் இயங்குவது நிறுத்தப்படுகிறது.
எனவே, மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களில் உள்ள வரிவசூல் மையங்கள் மற்றும் மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வரிவசூல் மையங்களிலும் வரிவசூல் பணிகள் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் தற்காலிமாக நிறுத்தவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.