அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
வால்பாறையில் ஆட்டோ இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்தக் கோரிக்கை
வால்பாறையில் ஆட்டோக்கள் இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று வால்பாறை ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சங்கத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை அண்ணா சிலை, பெட்ரோல் பங்க், பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ஸ்டன்மோா் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இதன்மூலம் சுமாா் 100 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின் ஆட்டோக்களின் வருவாய் கணிசமாக குறைந்துவிட்டது. எனவே, தற்போது உள்ள ஆட்டோக்கள் போதுமானதாக உள்ள நிலையில் மீண்டும் ஆட்டோ உரிமம் வழங்கினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, புதிய உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.