கயாகிங் செய்தவரை படகோடு விழுங்கிய திமிங்கலம்... என்ன நடந்தது - வீடியோ உள்ளே!
பூர நட்சத்திர வழிபாடு
வலங்கைமான் வட்டம், பாடகச்சேரியில் உள்ள பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் பூர நட்சத்திர சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.