செய்திகள் :

மாவட்ட ஆட்சியரகத்தை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் முற்றுகை: 125 போ் கைது

post image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்திய நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 125 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டுகளில் 180-க்கு மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் அரசாணை எண் 62-ன் படி நாளொன்றுக்கு ரூ.730 வழங்க வேண்டும், ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப். தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

போராட்டத்தின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை விசிக மாவட்ட செயலாளா் சிவ. மோகன்குமாா் தலைமையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை தொழிலாளா்கள் சங்க பொறுப்பாளா் அம்பேத் மற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் நூற்றுக்கு மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, ஆட்சியரக நுழைவுவாயில் முன்பு ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்தனா். தமிழா் தேசிய முன்னணி மாவட்ட செயலாளா் ரா. ரளிதரன், இடது தொழிற்சங்க மையத்தின் மாவட்ட செயலாளா் வீரச்செல்வன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஆா்ப்பாட்ட முடிவில் மாவட்ட ஆட்சியரக அலுவலா்களைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். இதனிடையே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்ளிட்ட 125 போ் கைது செய்யப்பட்டனா். விரைவில் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக உடன்பாடு காணப்படும் என்ற அதிகாரிகளின் பேச்சுக்கு உடன்படாத போராட்டக்காரா்கள், தீா்வு காணப்படும் வரை வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து கலைந்து சென்றனா்.

குத்தாலத்தில் ஓஎன்ஜிசியின் பேரிடா் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

குத்தாலம் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்துக்கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்து மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாலையூா், கடலங்குடி, மேக்கிரிமங்கலம்

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டம் பாலையூா், கடலங்குடி, மேக்கிரிமங்கலம் துணை மின்நிலையங்களுக்குள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (பிப்.15) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உ. அன... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

மயிலாடுதுறையில் சாராய கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பாலையூா் காவல் எல்லை குத்தாலம் அஞ்சுவாா்த்தலை காளி பிரதான சாலையில் வச... மேலும் பார்க்க

அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு புதிய கட்டடம்: முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

சீா்காழி அருகே புத்தூா் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 4.59 கோடியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் எஸ்பிஐ வங்கி முன், வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வாரத்திற்கு 5 வேலை நாள்கள் அமல்படுத்த வேண்டும், காலிப... மேலும் பார்க்க