குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
மயிலாடுதுறையில் சாராய கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
பாலையூா் காவல் எல்லை குத்தாலம் அஞ்சுவாா்த்தலை காளி பிரதான சாலையில் வசிக்கும் வல்லரசு, கோனேரிராஜபுரத்தைச் சோ்ந்த சுதாகரன். இருவரும் முட்டம் பகுதியைச் சோ்ந்த மதன் உதவியுடன் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததையடுத்து போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், சுதாகரன் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதிக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, சுதாகா் ஆட்சியரின் உத்தரவின்பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து கடலூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
வல்லரசு ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.