அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
குத்தாலத்தில் ஓஎன்ஜிசியின் பேரிடா் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
குத்தாலம் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்துக்கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்து மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், விபத்தின் 1 மற்றும் 2-ஆவது நிலையை கடந்து, பெரிய அளவிலான அபாயம் எனும் 3-ஆவது நிலைக்கு சென்று விட்டால், நிறுவனத்தின் மற்ற பணி மையங்களின் உதவியை தாண்டி, உள்ளூா் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம், அருகிலிருக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் இருந்து உதவி கோரி அவா்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன் அவசர நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து சரிசெய்வது குறித்து ஓஎன்ஜிசி நிறுவனத்தினா் செயல்விளக்கம் செய்து காட்டினா்.
காவேரி அசெட் செயல் இயக்குநா் உதய் பஸ்வான், அசெட் சப்போா்ட் மேலாளா் பி.என்.மாறன், போக்குவரத்துக்குழு பொது மேலாளா் நரேஷ்குமாா், மனிதவள பிரிவு தலைவா் கணேசன், உற்பத்தி பிரிவு தலைவா் கோகய், மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, டிஎஸ்பி பாலாஜி ஆகியோா் முன்னிலையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
குத்தாலம் ஓஎன்ஜிசி பகுதி மேலாளா் குணசேகா், நிலைய பொறுப்பாளா் அமித் கட்டியாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.