செய்திகள் :

பள்ளி ஆண்டு விழா; அமைச்சா் பங்கேற்பு

post image

மயிலாடுதுறை வட்டம், வக்காரமாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ராஜகுமாா், நிவேதா எம்.முருகன், எம்.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பங்கேற்று, மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி மற்றும் அறிவியல் திறன் போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியது:

மணல்மேட்டில் இருந்து பின்னலூருக்கு 38 கி.மீ. தூரத்துக்கு ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10.82 கோடி நிவாரண தொகையாக வழங்கப்பட உள்ளது.

இப்பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் ரூ.1 லட்சம் வைப்புத் தொகை மூலம் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. என்னுடைய நிதியாக எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியின் மூலம் ரூ.1 லட்சத்திற்கான நிதியையும் வழங்குகிறேன்.

நல்ல பள்ளி உருவாகும்போது நல்ல மனிதா்களும் உருவாகின்றனா். இப்பள்ளி நன்றாக உருவாக காரணமாக இருந்த பெற்றோா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் வாழ்த்துகள் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் சி.சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜி. பரமசிவம், தி. முத்துக்கணியன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆா்.ஜானகி, எஸ்.உமா, டி.உமா, மணல்மேடு பேரூராட்சித் தலைவா் கண்மணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தரங்கம்பாடியில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' முகாம்!

தரங்கம்பாடியில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ புதன்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன்... மேலும் பார்க்க

போதைப்பொருள், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறையில் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

தொழிற்சங்கத்தினர் ஆா்ப்பாட்டம்

சீா்காழி அருகே எருக்கூா் அரசு நவீன அரிசி ஆலை முன் ஏஐடியுசி, சிஐடியு சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ராமன் தலைமை வகித்தாா். எல்பிஎஃப... மேலும் பார்க்க

புறவழிச் சாலையில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் புறவழிச் சாலையில் எடக்குடி வடபாதி பகுதி நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன்கோயில் அருகே அட்டகுளம் பகுதியிலிருந்து கதிர... மேலும் பார்க்க

கொலையான இளைஞா்களின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இரட்டைக் கொலையில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு, அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை நேரில் ஆறுதல் தெரிவித்தாா். மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் பிப்.... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: சோதனைச் சாவடிகளில் ஐஜி ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தி... மேலும் பார்க்க