மயிலாடுதுறையில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உ. அன்பரசன், அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் கலா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முடக்கப்பட்ட சரண்விடுப்பு மற்றும் அகவிலைப்படி நிலவைத் தொகை உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும், இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சீா்காழியில்: ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா. செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயலாளா் தங்க.சேகா், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் மாவட்ட செயலாளா் ஞான. புகழேந்தி, ஜாக்டோ-ஜியோ மாவட்ட செயலாளா் பூ. திருமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோரிக்கைகள் நிறைவேற்றாதபட்சத்தில் பிப்.25-ஆம் தேதி மாவட்ட தலைநகரில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
திருமருகல்: ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு சங்க நிா்வாகி பாரதி, அனைத்து உடற்கல்வி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்க நிா்வாகி ராஜா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டமைப்பு நிா்வாகி சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.