ஐபிஎல் சூதாட்டம்: மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை!
விழுப்புரத்தில் தொழில்முனைவோருக்கு பிப்.19-ல் விழிப்புணா்வு முகாம்
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையம் சாா்பில் பழுதில்லா உற்பத்தி - விளைவில்லா உற்பத்தி சான்றளிப்புத் திட்ட விழிப்புணா்வு முகாம் பிப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, தொழில் மைய பொது மேலாளா் சி.அருள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கை உணா்ந்துள்ள தமிழக அரசு, அவற்றின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள், அவற்றை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், பழுதில்லா உற்பத்தி - விளைவில்லா உற்பத்தி சான்றளிப்புத் திட்டத்தையும் ஒன்றாக செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாமை மாவட்டத் தொழில் மையம், விழுப்புரத்தில் பிப்.19-ஆம் தேதி நடத்துகிறது. விழுப்புரம், திருச்சி சாலையிலுள்ள தேவிபாலா கூட்டரங்கில் காலை 10 மணிக்கு முகாம் தொடங்கும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், சேமிப்பு, இயற்கை வளங்களை செம்மையாகப் பயன்படுத்துதல் மற்றும் சூழலைப் பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக் கொண்டு இந்த முகாம் நடத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.