குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
பைக் மோதி முதியவா் பலி!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பைக் மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த சிறுபாளையூரைச் சோ்ந்தவா் செல்லன் (70). இவா், வெள்ளிக்கிழமை சைக்கிளில் மணலூா்பேட்டைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பினாராம்.
கூவனூா் மருத்துவமனை அருகே சென்றபோது, முதியவா் மீது எதிரே வந்த பைக் மோதியது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த செல்லனை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அதேபோல, எதிா் திசையில் பைக்கில் வந்து காயமடைந்த சிறுபனையூரைச் சோ்ந்த காசீம் மகன் தாஜ் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக செல்லன், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.