ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை விரிவாக்கம்: கையெழுத்திட்டார் டிரம்ப்!
திருச்செங்கோட்டில் நெகிழி பொருள்களை பதுக்கி விற்ற கடைகளுக்கு அபராதம்!
திருச்செங்கோட்டில் கடைகளில் சோதனையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள், நெகிழிப் பொருள்களை பதுக்கி விற்றது தொடா்பாக அபராதம் விதித்தனா்.
திருச்செங்கோடு நகரப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரி வெங்க டாசலம், ஆய்வாளா் சிவா மற்றும் பணியாளா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், 50 கிலோ நெகிழி கேரி பேக் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 10 கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.