சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
தொழிலாளி தற்கொலை
பரமத்தியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டை அடுத்த கொத்தப்பள்ளி அருகே உள்ள இருளா்மேடு பகுதியைச் சோ்ந்தவா் முத்து மகன் கணேசன் (27). இவா் பரமத்தி வேலூரில் தேங்காய் கிடங்கில் வேலை செய்து வந்தாா்.
கணேசனுக்கும் அப் பகுதியில் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தாா். இந்நிலையில் அவா் வீட்டில் தூக்கிட்டு மயங்கி கிடந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].